இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இன்று பங்களாதேஷில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைக் பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 49 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கவிஷா தில்ஹாரி, 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் அதிகளவில் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment