கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று முன்தினம் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று மார்க் கார்னியின் லிபரல் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளின்படி, 343 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், லிபரல் கட்சி தற்போது 174 இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment