Ads (728x90)

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம், கடந்த 06 நாட்களில் மாத்திரம் ஒரு பில்லியன் (1,000 மில்லியன்) ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பதிவாகியுள்ளது.

அன்று ஒரு நாளில் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகச் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் நலன் கருதி மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தியதன் மூலமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget