Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப் போலவே, பொதுமக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் சுயாதீனமான, நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட விசாரணை மற்றும் நீதித்துறைச் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget