Ads (728x90)

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 23 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது.

பிரச்சார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 7.00  மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இம்முறை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதன்படி, மு.க. ஸ்டாலின் (தி.மு.க), கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க), மயிலாப்பூரில் சொந்த ஊரான சேலத்தில் பிரசாரத்தை முடித்தார்.

விஜய் (த.வெ.க), பெரம்பூரில் ஆரம்பித்து சென்னை நந்தனத்தில் பிரம்மாண்டமான கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சீமான் (நா.த.க), காரைக்குடியில் தனது இறுதிக்கட்டப் பேச்சை நிகழ்த்தியுள்ளார். மொத்தமாக 5 கோடியே 73 இலட்சத்து 43,291 பேர் வாக்களிக்கவள்ளனர். சுமார் 3,60,000 அரசாங்க ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget