Ads (728x90)

Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதனை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், நாடு முழுவதும் உள்ள 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் 'சிஹின கமானாந்தய' திட்டத்தின் ஒரு அங்கமாக மருதானை புகையிரத நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையில், 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் தொன்மை மாறாமல் ஆறு மாத காலத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக நிலவி வந்த நீர் கசிவு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 2,000 சதுர அடிக்கும் அதிகமான கூரைப்பகுதி நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன பாதுகாப்பு கமெராக்கள், புதிய மின் விளக்குகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சுகாதார அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் வர்ணம் பூசப்பட்டு, சூழல் அழகுபடுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget