Ads (728x90)

ஈரான்-அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளது. 

அதன்படி, அமெரிக்காவிலிருந்து நேற்றுப் புறப்பட்ட ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர், இன்று காலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

இன்று பிற்பகல் ஈரானியப் பிரதிநிதிகளுடன் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தையில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இவருடன் அமெரிக்காவின் விசேட தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, இந்த பேச்சுவார்த்தைக்காக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகெர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினரும் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget