அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, 20 மாவட்டங்களுக் சிவப்பு எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment