Ads (728x90)

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.

முன்னதாக அச்சிடப்பட்ட தொகுதிகளில் காணப்பட்ட சிக்கல்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய மறுசீரமைப்புகளின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும், இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget