பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் பொருட்டு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இந்தியா, தாய்லாந்து. இந்தோனேசியா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அவுஸ்ரேலியா, ஆஸ்திரியா, பஹரைன், பெலராஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நேபாளம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான்,கஸகஸ்தான், குவைத், மலேசியா, நோர்வே, நெதர்லாந்து,நியூசிலாந்து,ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிஸ்லாந்து. தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 30 நாட்களுக்கு சுற்றுலாவுக்கான இலவச விசா வழங்கப்படும் என்றார்.
Post a Comment