Ads (728x90)

இலங்கையின் பொதுப்போக்குவரத்துறையில் கடந்த 4ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ பேருந்து சேவைக்காக, மற்றுமொரு நவீன சேவை வழங்கல் மற்றும் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இரத்மலானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் கட்டுமானப் பணிகளை 91 நாட்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நவீன முனையத்தை அமைப்பதற்காக சுமார் 120 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டிரான்சிட் (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ”எலக்ட்ரோ மெட்டல் பிரசிங்”நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது.

மெட்ரோ பேருந்து சேவையை வலுப்படுத்த இலங்கை முழுவதும் 05 பிரதான சேவை நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget