Ads (728x90)

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மேலதிக வரி இன்று முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு வசூலிக்கப்படவுள்ளது. எனினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% மேலதிக வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த 50% மேலதிக வரியைக் கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். 

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்துகொண்டு விளக்கமளித்துள்ளார். 

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இறக்குமதிச் செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய நாட்டிலுள்ள கையிருப்புகளை முகாமை செய்வதற்காக 3 மாத காலத்திற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget