Ads (728x90)

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு. 

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு 'கருப்பு' திரைப்படம் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நீதியை பெற்று தர வேண்டிய மனிதர்களை நீதிக்காக கடவுள் எதிர்க்கும் கதையே 'கருப்பு' திரைப்படத்தின் கதை.

நீதிமன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதுடன், கருப்பசாமி என்ற கிராமத்து தெய்வத்தின் நம்பிக்கையும் தூவி கமர்சியல் மசாலா கலந்து படத்தை எடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி. 

கேரளாவில் இருந்து தனது மகளின் ஆபரேஷனுக்காக தமிழ்நாடு வருகிறார் இந்திரன்ஸ். வந்த இடத்தில் அவர்களுடைய நகையை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு செல்ல, பின் அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். 

ஆனால், 60 பவுண் தங்க நகைக்கு பதிலாக 45 பவுண் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. மேலும், இந்த நகையை இப்போது தரமுடியாது, நீதிமன்றத்தின் மூலமாகதான் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என அங்கிருக்கும் கான்ஸ்டபிள் கூறுகிறார்.

ஆனால், சுலபமாக முடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து இந்திரன்ஸிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு இருக்கிறார் பாலாஜி.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் இந்திரன்ஸ் தனது வேதனையை கூறி, என் பிரச்சனையை தீர்த்துவை என மிளகாய் அரைத்து கருப்பு சாமிக்கு பூசுகிறார். பக்தரின் வேண்டுதலை ஏற்று வேட்டை கருப்பாக என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா.


Post a Comment

Recent News

Recent Posts Widget