Ads (728x90)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சனிக்கிழமை மாலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்தமையை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை அடுத்து இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக த.வெ.கவின் எண்ணிக்கை 107 ஆகியுள்ளது. 

முதல் கட்சியாக காங்கிரஸ் தனது ஆதரவை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளதால், த.வெ.க தலைமையிலான கூட்டணியின் பலம் 112 ஆக அதிகரித்தது.

ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தேவை எனும் நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, ஐயு.எம்.எல் ஆகிய கட்சிகளும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget