Ads (728x90)

கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி கடுகதி ரயில் சேவை, வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளின் நிறைவைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும் யாழ் தேவி ரயில், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும்.

வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளைத் தொடர்ந்து, இந்தச் சேவை மீண்டும் அமுலுக்கு வருகின்றது.

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget