இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறை சார்ந்த தரப்பினர் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நவீன முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிஜிட்டல் அட்டைகள் மூலம், காப்புறுதிச் சான்றுகளை இனி டிஜிட்டல் அட்டையாகவோ அல்லது காப்புறுதி நிறுவனங்களின் கைபேசி செயலி மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும், தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் கோரிக்கையின் அடிப்படையில் அச்சுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினரும், பொதுமக்களும் வாகனக் காப்புறுதியின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment