வனவாசல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கு, தொடருந்து தண்டவாளத்தின் தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் மற்றும் பிரதான தொடருந்து பாதை ஆகியவற்றுக்கு இடையே தொடருந்ததை தடம் மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகளை ஒரு குழுவினர் திட்டமிட்டோ, ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
12.jpg)
Post a Comment