முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப் பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், காலை 10.29 மணிக்கு நினைவொளி சத்தம் எழுப்பப்பட்டு, 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் நான்கு அங்கத்தவர்களை இழந்த வற்றாப்பளையை சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யுத்தத்தினால் உயிரிழந்தோரின் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மத குருமார்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment