Ads (728x90)

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுப்பதற்கு எந்நேரமும் நாம் தயாராக இருக்கின்றோம். இருப்பினும், அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, பரந்தளவிலான மேற்பார்வையின் பின்னரே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மல்வானைக் காணியையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளித்து, சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொண்டதன் பின்னர், அதனைப் பொருத்தமான உயர்கல்வி நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்று பிரதமர் அலுவலகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதரனத்தொடர்ந்து, தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அதன் இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget