Ads (728x90)

நியூசிலாந்து பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஜெர்ரி பிரவுன்லீயை இன்று புதன்கிழமை காலை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து, குறிப்பாக வர்த்தகம், கல்வி மற்றும் பாராளுமன்ற தொடர்புகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக எங்களுக்கிடையில் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

மேலும், 2024 ஜூலை மாதம் பல்கட்சி நியூசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதிக்குழுவின் தலைவராக இலங்கைக்கு மேற்கொண்ட தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஜெர்ரி பிரவுன்லீ இதன்போது நினைவு கூர்ந்ததாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திற்கு, நேற்று காலை அந்நாட்டு அரசாங்கத்தினால் பாரம்பரிய ”மௌரி” வரவேற்பளித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget