Ads (728x90)

உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக சுகாதாரப் பேரவையின் கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

இந்த நிகழ்வில் 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், ராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் கூட்டத்தொடரின் தலைவர் என்ற ரீதியில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று 79 ஆவது உலக சுகாதாரப் அமைப்பில் உரையாற்றியுள்ளார்.

இந்த வருட பேரவையின் "One world for Health"  என்ற கருப்பொருளின் கீழ், உலகளாவிய சுகாதார சவால்கள், தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீடு குறித்த பல விவாதங்கள், பயிலரங்குகள், அமர்வுகள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget