Ads (728x90)

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் நேற்று மாலை 5.35 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். 

இலங்கை வந்த மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட தூதுக்குழுவினரை பிரதமர் ஹரிணி அமரசூரிய சம்பிரதாயமாக வரவேற்றார்.

இந்நிலையில் அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. 

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அவரது மனைவி மற்றும் அந்த நாட்டின் 20 உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget