இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுர குமார திசாநாயக்கவைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்த கௌரவத்தினை கம்பன் கழகத்தினர் அளித்துள்ளனர்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026 இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.இதன்போது நீதியரசர் பா.சசி மகேந்திரன் தலைமை உரையினையும், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலையும் கலந்துகொண்டார்.
கம்பன் கழகம் இவ்வாண்டு ஆறு சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


Post a Comment