Ads (728x90)

புங்குடுதீவு மாணவி சிவயோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மாலை நடத்தப்பட்டது.

இவர் தன்னை தானே, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், உடலில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய காயங்களும் இல்லை என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் தெரிவித்துள்ளார்.

உடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மனைவி, இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரி சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்

இதனை அடுத்து அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



 

Post a Comment

Recent News

Recent Posts Widget