எதிர்காலத்தில் வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகளை வழங்கும் நடைமுறை முழுமையாக நிறுத்தப்படும் என பொதுக்காப்புறுதி மன்றத்தின் தலைவர் தினுஷ திலங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமது கைபேசிகள், இணையத்தளத் தளங்கள் மற்றும் கியூ ஆர் (QR) குறியீடுகள் மூலம் அணுகக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய காப்புறுதி ஆவணங்களின் விபரங்களை வாகன உரிமையாளர்களோ அல்லது காவல்துறையினரோ எந்த நேரத்திலும் சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கென பிரத்தியேகமாக '1338' என்ற துரித இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment