உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ், இதற்கான அங்கீகாரச் சான்றிதழை இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் 79ஆவது உலக சுகாதாரக் பேரவை அமர்வில் வைத்து நேற்று இந்த விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தி, அது பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படாத நிலைக்குக் குறைத்துள்ளமைக்காகவே இந்த விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment