Ads (728x90)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் அறையொன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று முற்பகல் கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரியும் அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தார். 

இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கையில், இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர். 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget