Ads (728x90)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையை வந்தடைந்தார். அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸிற்கு சொந்தமான VN-1 என்ற விமானம் மூலம் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சோசலிச வியட்நாம் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் நாளை முற்பகல் 11.40 மணிக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.  

2015ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகத் தலைவரொருவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget