இதன்போது, டிட்வா பயலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பங்களிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, கொள்கை முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனம், இலங்கையின் சாதகமான பொருளாதாரப் பயணம் ஆகியன குறித்து ஐக்கிய இராச்சியத்தின் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நகர்வுகள், வலுசக்தித் துறையில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், பிராந்திய தொடர்பாடல் மற்றும் நீண்டகால வலுசக்தி பாதுகாப்பைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதேநேரம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனையும் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி; மாணவர் பரிமாற்றம் (Student mobility), கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது.


Post a Comment