பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைய அமைக்கப்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டவாறு, இந்தத் தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே நிவாரண அடிப்படையில் பணியாற்றி, சுற்றுநிருப விதிகளுக்கமைய நிரந்தர நியமனம் பெற்றிருந்தும், அந்த நியமனங்கள் இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்களை முறைப்படுத்துவது தொடர்பான நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Post a Comment