சென்னை ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாகவும், அதேவேளை கம்பீரமாகவும் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பெண்கள் பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைபொருட்கள் குற்றம் தடுக்க அனைத்து மாநகரங்களில் போதைபொருள் தடுப்பு பிரிவு உருவாக்குதல், தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குதல் என புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.
விஜயைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சினிமாவில் கஷ்டப்பட்ட சாதாரண உதவி இயக்குனருக்கு குழந்தையாக பிறந்த எனக்கு வறுமை, பசி என நல்லாவே தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உணர்கிறேன்.
மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான். கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டேன். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.
தவறு செய்ய மாட்டேன். செய்யவும் விடமாட்டேன். சிறுபான்மையினருக்காக தவெக அரசு துணை நிற்கும். மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன். தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும் என விஜய் தனது உரையில் தெரிவித்தார்.
விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

Post a Comment