நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் நன்மை பயக்கும். உடல் நீரேற்றமாக இருப்பது உங்கள் தலைமுடியின் ஈரப்பதம் சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் வறட்சியைத் தடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் தேவை. தலைக்கு அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் அகன்று தலைமுடி மேலும் உலர்ந்துப் போக வாய்ப்புள்ளது. வாரத்தில் 2-3 முறை கண்டிஷனிங் பயன்படுத்தி தலைமுடியினை அலசுவது நல்லது.
கோடையில் சருமம் மட்டுமில்லை தலைமுடியையும் நீரேற்றமாக வைப்பது அவசியம். நிறைய தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
ப்ளோ ட்ரையனர்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் நிறங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது தலைமுடியினை சேதப்படுத்தும். அதற்கு பதில் இயற்கை முறையிலான சிகை அலங்காரங்களை செய்யலாம்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களால் மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்கும்.
உலர் தலைமுடி உள்ளவர்கள் ஆழமான கண்டிஷனிங் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது. இது முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, முடிக்கு ஊட்டமளிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோடையில் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம்.
Post a Comment