Ads (728x90)

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிலையில் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு, இரு நாடுகளின் தேசிய ஆவணக் காப்பகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்களுக்கான பயிற்சி, தொழில் அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குகின்றன.

அத்துடன், மாலைதீவின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சுக்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலும், கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மாலைதீவின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கு இடையிலும் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவாகும். 

Post a Comment

Recent News

Recent Posts Widget