சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் இவான் பாபகோர்ஜியு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் 60-70 சதவீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கம், தற்போது குறைந்த ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக கடந்த மாதம் தற்காலிக உயர்வொன்றைக் காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான திட்டத்தின் கீழ், புதிய பணத்தை அச்சிடுவதன் மூலம் அரசாங்கத்தின் பாதீட்டுப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதை இலங்கை மத்திய வங்கி தற்போது நிறுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மத்திய வங்கியின் 5 சதவீத பணவீக்க இலக்கிற்கு இணங்கவே கொள்கை வட்டி விகிதங்கள் பேணப்பட்டு வருவதாகவும், இது விலை ஸ்திரத்தன்மையைத் தக்கவைப்பதற்குப் பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பைத் தொடர்ந்து கட்டியெழுப்பி வருவதாகவும் பாபகோர்ஜியு தெரிவித்துள்ளார்.
Post a Comment