Ads (728x90)

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற நகரங்களை, அவற்றின் பாரம்பரியம் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாதிரி நகரங்களாக மறுசீரமைப்பதற்கும், அவற்றை வர்த்தகநாமப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகம, வவுனியா, எஹலியகொட, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய 10 நகரங்களில் கண்டறியப்பட்டுள்ள 217 முன்னுரிமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மொத்தம் 1,475 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இந்த 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை 2026ஆம் ஆண்டுக்குள் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget