Ads (728x90)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், மாகும்புரவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை சொகுசு பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் செயல் திறன் மிக்க, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்தச் சேவையை நடைமுறைப்படுத்துகின்றன. 

பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், சேவையின் செயல்திறன் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

இந்தச் சேவையின் மூலம் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து விமான நிலையத்திற்கும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.

காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது. 

இதற்கான பயணக் கட்டணம் 410 ரூபா என்பதுடன், பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் ஆகும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget