Ads (728x90)

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, புறக்கோட்டை மொத்த சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இப்பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget