Ads (728x90)

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 FIFA கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இன்று 11 ஆம் திகதி மெக்சிகோவின் புகழ்பெற்ற 'Estadio Azteca' மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

உலக வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் தனித்துவமான விளையாட்டு நிகழ்வாக இந்த வருட உலகக் கிண்ணத் தொடர் அமைந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தொடர், கால்பந்து வரலாற்றில் பல தனித்துவமான அம்சங்களுடன் இணைகிறது.

உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன. மேலும், 96 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக இம்முறை 48 அணிகள் பங்கேற்கின்றன.

மெக்சிகோவின் புகழ்பெற்ற 'Estadio Azteca' மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆரம்ப விழா இன்று தொடங்கியது.

நடிகை பெலிண்டா, பாடகர்கள் டேனி ஓசியன், பால்வின், பாடகி லிலா டவுன்ச் ஆகியோரும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

இத்தொடரின் முதலாவது போட்டி இன்று மெக்சிகோ நகரில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

மெக்சிகோ மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய இப்போட்டியில் மெக்சிகோ அணி 2:0 கோல் கணக்கில் முதல் வெற்றியை தனதாக்கியது.

நாளை காலை 7.30 மணிக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. 



Post a Comment

Recent News

Recent Posts Widget