Ads (728x90)

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விநியோக நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்தினால் ரூபா 200 மில்லியன் பெறுமதியான 6 நவீன குளிரூட்டப்பட்ட வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அக்கியோ இந்த வாகனங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கொழும்பிலுள்ள மீன்பிடிக் கூட்டுத்தாபனத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையில் 1945 ஆம் ஆண்டு முதல் அசைக்க முடியாத வரலாற்று ரீதியான நட்புறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தக் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் மீன் அறுவடையின் தரத்தைப் பேணி, நுகர்வோருக்குப் புதிய மீன்களை வழங்க முடிவதுடன், மீன்கள் வீணாவதையும் குறைக்க முடியும் என தெரிவித்தார்.  

எமது நாட்டின் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்காக ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கும் உதவிகளுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார். 

இலங்கையின் மொத்த மீன் அறுவடையில் சுமார் 40% வீணாவதாகச் சுட்டிக்காட்டிய ஜப்பானிய தூதுவர் இசோமாடா அக்கியோ, இந்த அறுவடைக்குப் பிந்தைய நஷ்டத்தைக் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்தார். 

இச்செயற்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 03 ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget