கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை சுகாதாரத் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் முதற்கட்டமாக இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது டெங்கு அவதானம் கூடிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வீட்டுத்தொகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
”கிளீன் ஸ்ரீலங்கா” செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.
.jpeg)
Post a Comment