இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் கேபி லெவிஸ் 50 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிஸ் டெக்டர் 28 ஓட்டங்கள் எடுத்தார்.
131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 134 ஓட்டங்களை எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சமரி அதபத்து, 61 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 106 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
.jpeg)
Post a Comment