Ads (728x90)

"காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. 

அனைத்து உயிரினங்களினதும் வாழ்வை உறுதிப்படுத்தும் நிலைபேறான சூழலை நோக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் கொள்கையானது, சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சூழலுக்கு இடையிலான சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் ஆரோக்கியமானதொரு சமூகத்திற்கும், சமநிலையான சூழலுக்குமே முன்னுரிமை அளித்துள்ளது.

அதன்படி, நிலைபேறான அபிவிருத்திக் கட்டமைப்புக்குள், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் கொள்கைகளுக்கு இணங்க, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சியில் இலங்கை தற்போது பங்களித்து வருகின்றது.

இத்திட்டத்தின் படி, 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்விற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். 

மேலும், இம்முறை உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்விற்கு இணையாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 05 பாதுகாக்கப்பட்ட காடுகளைப் பிரகடனப்படுத்துதல், யானை நடைபாதைகளை விடுவித்தல் போன்ற பல்வேறு நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், இப்பணிகளுக்குப் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

“சொபா”சுற்றுச்சூழல் சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பதிப்பு, “சொபா கெத” சுற்றுச்சூழல் சஞ்சிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நூல் வெளியீடும் இதன்போது நடைபெற்றது. 

இம்முறை தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு, பூச்சிய கார்பன் உமிழ்வு திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

காலநிலை மாற்றப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை ஜனாதிபதி லழங்கி வைத்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget