காலி-தடல்லை அல்-முபாரக் வித்தியாலயத்தில் கிராம மக்களால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் விழாவில் உரையாற்றும் அவர் இதனை தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், அனைத்து இரண்டாம் நிலைப்பாடசாலைகளுக்கும் தலா ஒரு திறன்பலகை (Smart Board) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 4,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏனைய பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.தொழில்நுட்பத்தைப் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் பயன்படுத்துவதற்காக, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட வகுப்பறைகள் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வளங்களைக் கொண்ட இந்த பாடசாலையை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பியமை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.


Post a Comment