தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று கொழும்பு மருத்துவ பீட அரங்கத்தில் நடைபெற்றது.
பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான மற்றும் நியாயமான விலையில் உணவை வழங்கும், ‘மாணவர்களுக்கு உகந்த பாடசாலை சிற்றுண்டிசாலைகளை உருவாக்கிப் பராமரித்தல்’என்ற நோக்குடன் தயாரிக்கப்பட்ட “ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் குறித்த வழிகாட்டுதல்கள்”சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் ஆதரவுடன் வெளியிடப்பட்டது.
1. நல்ல ஊட்டச்சத்துடனும், தொற்றா நோய்களின் அபாயமின்றியும் இருக்கும் ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களை உருவாக்குதல்.2. பாடசாலை மாணவர்களுக்கு சுவையான, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குதல்.
3. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு குறித்த சரியான மனப்பான்மையை உருவாக்குவதற்குப் பங்களித்தல், அதன் மூலம் சரியான உணவுப் பழக்கங்களையும் நடத்தைகளையும் கொண்டு வருதல்.
4. பாடசாலை மாணவர்கள் இடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உருவாக்குதல்.
5. சிற்றுண்டிச் சாலையை முறையாகப் பராமரித்து, சுகாதாரத்தை உறுதி செய்தல்
இந்த வழிகாட்டி, ஆகிய ஐந்து பிரதான நோக்கங்கள் தொடர்பான நன்மைகளை எதிர்பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்களை மக்களிடையே விரைவாக பரவலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் தோன்றி வேகமாக வளர்ந்து வரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு ஒரு வெற்றிகரமான தீர்வைக் காண, வலுவான முடிவுகளும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தின் பல பிரிவினர் இந்தப் பிரச்சினை குறித்த உண்மைகளைப் புரிந்துகொண்ட போதிலும், சரியான நடவடிக்கைகளைப் பின்பற்றத் தயக்கம் காட்டுகிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



Post a Comment