Ads (728x90)

உடல் நலம் மற்றும் மன அமைதியை மேம்படுத்த உருத்திராட்சம் அணிவது மிகவும் சிறந்தது. இதன் இயற்கை சார்ந்த காந்தப் பண்புகள் மற்றும் அதிர்வுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலின் ஆற்றலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.

 'உருத்திரம்' என்றால் 'உருத்திர மூர்த்தி', 'அட்சம்' என்றால் 'கண்'. உருத்திர மூர்த்தியின் கண்ணில் இருந்து தோன்றியதால் உருத்திராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது. சைவ சமயத்தைச் சார்ந்தவர்களின் சின்னங்கள் இரண்டு. ஒன்று விபூதி, மற்றொன்று உருத்திராட்சம்.

இவற்றை உபயோகிப்பவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரமாவதாக ஐதீகம். சிவபெருமானின் திருநயனங்களில் தோன்றியதுதான் உருத்திராட்சம். 

அதை அணிந்து கொள்ளும் பொழுது உடல் நலம் சீராகின்றது. இவற்றை உபயோகிப்பவர்கள் தெய்வீகப் பற்று மேலோங்கி விளங்குவர். 

காந்த ஆற்றலையும், மின்னாற்றலையும் உடையது உத்திராட்சமாகும். அதன் நேர் கோடுகளை முகம் என்று கணக்கிடுகின்றோம். திருமுறைகள் கூறும் பொழுதும் சந்தியாவந்தன காலத்திலும் உருத்திராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். 

உருத்ராட்சத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை கொண்ட உருத்ராட்சங்கள் உள்ளன. ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் உருத்ராட்சத்தை அணியலாம்.

பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிலக்கு முழுவதும் நின்ற பின்னர் அணிவது நல்லது. அப்படி அணியும் பெண்கள் உருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொள்வது நல்லது.

Post a Comment

Recent News

Recent Posts Widget