Ads (728x90)

திருகோணமலை கடற்படை முகாமில் ”கன்சைட்” (Gun Site) என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (CID) மற்றும் திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர். 

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இந்த வளாகத்தை சீல் வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ”கன்சைட்” எனப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நிலத்தடி சிறைச்சாலையில் கடத்தப்பட்ட பலர் சித்திரவதை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

பதினொரு இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்க செய்ததுடன், மேலும் பலரைச் சித்திரவதை செய்வதற்கு இந்த ”கன்சைட்”சிறை பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டதோடு, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget