குருணாகல் மாவட்டத்தில் இன்று மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின்போது, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் மேற்கொள்வதன் மூலம், மாணவர்களுக்குப் பயனுள்ள கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, 2025 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் பாடநெறிசார் செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கி வைத்ததோடு, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ பாடசாலைப் பத்திரிகையான “ஆதர்ஷ பிரபா” இதழும் பிரதமரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.


Post a Comment