மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கே. சிவா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சிங்களத் திரையுலகின் மறைந்த முன்னணி நட்சத்திர நடிகரான ஜாக்சன் ஆண்டனி அவர்களின் புதல்வர் அகில தனுத்தர ஆண்டனி, இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அதேபோன்று, நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டன் அவர்களின் புதல்வி ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் தசுன் பதிரண நடிக்கிறார். இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அவர்களில் ஜெராட் நோயல், அரவிந்தன், இம்ரான், ருத்ரா, பேர்லிஜா, உமேஷ், பிரவீன், துஜா, மதனு கிருஷ்ணா, ஜினிஷ்காந்த், அனுஷன், வருண், தினேஷ், காண்டீபன் கிங்ஸ்லி, நவசீகரன், சாந்தா, வரதன், யுவன் நாதன், லிங்கராஜா மற்றும் பூமிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
திரைக்கதை மற்றும் இணை இயக்குநராக தமிழ்ச்செல்வன் சுப்பிரமணி பணியாற்ற, சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் வசன அமைப்பை ருத்ரா அமிர்தரெத்தினம் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை நளிந்த விக்ரமசேகர மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மல்லேஷ் கவனிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

Post a Comment