சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் விரிவாக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்ட ஏற்பாட்டின் ஏழாவது மதிப்பாய்வின் போது, இலங்கையின் திட்ட செயல்பாடு முறைப்படி மதிப்பிடப்படும் என்று தூதுக்குழுவினர் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.


Post a Comment