இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது, நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு தங்களது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக வலியுறுத்தினர்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக தனது தெரிவித்த பிரதமர், எதிர்காலத்திலும் இருதரப்பிற்கும் இடையிலான பங்களிப்பைத் தொடர்ந்து பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் நிலையான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை தனது எதிர்காலப் பாதையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் எனப் சுட்டிக்காட்டிய பிரதமர், குறிப்பாக மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில் எரிசக்தி, துறைமுகம் மற்றும் விவசாயத் துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி, நாட்டின் வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment